மரம் வீழ்ந்து மடிவதற்குள் எங்களை காப்பாற்றுங்கள் மஸ்கெலியா பிரவுன்லோ மக்கள் கோரிக்கை
மஸ்
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்த கருப்பன் தையிலம் மரங்கள் எப்போதுதாவுது வீடுகளின் மேல் வீழ்ந்து உயிராபத்து ஏற்படலாம் என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
காற்று மற்றும் மழை நேரங்களில் இந்த வீடுகளில் உள்ள ஒரு சிலர் அச்சம் காரணமாக தங்களது கைகுழந்தைகளை தூக்கிக்கொண்டு அயலவர்களின் வீடுகளில் சென்று வாழ்ந்து வருவதாகவும் கடந்த நான்கு வருடமாக இந்த அவல நிலை தொடர்வதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் சிலர் காற்று மற்றும் மழையின் போது உயிரை கையில பிடித்து கொண்டு உறங்காமல் துன்பப்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த கிராம சேவகர் ,பிரதேச செயலாளர்,வன இலக்கா அதிகாரிகள் தோட்ட நிர்வாகம் உள்ளிட்டு அத்தனை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை தெளிவு படுத்திய போதிலும். அவர்கள் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என இவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே மரம் வீழ்ந்து மடிவதற்குள் தங்களை காப்பாற்றுமாறு இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்..
