சுகாதார பொறிமுறைகளுக்கமைய உணவு பொருட்களை விற்பனை செய்யாத 27 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்,135 பேருக்கு எச்சரிக்கை.
ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டல்களுக்கு அமைய ஹட்டன் டிக்கோயா நகரசபை சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் நேற்றும்(17) இன்றும் (18) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹட்டன், டிக்கோயா ஆகிய இரு நகரங்களின் சுமார் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்காது உணவு பொருட்கள் விற்பனை செய்து வந்த 27 கடை உரிமையாளர்களுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

ஹட்டன் நகரசபைக்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா நகர பிரதேசங்களில் காணப்படும் உணவகங்கள்;, கொசரி விற்பனை நிலையங்கள், சில்லறை கடைகள், தங்குமிட வசதிகளுடன் கூடிய ஹோட்டல்கள் பழக்கடைகள், குளிர்பான மற்றும் இனிப்பு பான வர்த்தக நிலையங்கள், பேக்கரிகள், உட்பட பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது பாவனைக்குதவாத பொருட்கள் ,வர்த்தக நாமம் இன்றி பொதியிடப்பட்ட பொருட்கள், வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டு உரிமையாளர்கள் இல்லா உணவு பொருட்கள், பாதுகாப்பான முறையில் பொதி செய்யப்படாத பொருட்கள், காலாவதியான பொருட்கள், காலவதியாகும் திகதிகள் குறிப்பிடப்படாத பொருட்கள் உட்பட சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது விற்பனை செய்த உணவு பொருட்கள் இதன் போது கண்டுபிடிக்கப்பட்டன. அதனை கடுமையான விதிமுறைகளை மீறியவர்களுக்கு வழக்கு தாக்கல் செய்ததுடன் ஏனைய சுமார் 135 பேர் வரை எச்சரிக்கப்பட்டு அவர்களுக்கு திருத்திக்கொள்வதற்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் அவர்கள் சுகாதார வழிமுறைகள் மீறுவார்களேயானால் அவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு பல்வேறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்;ந்த 25 பேர் ஐந்து குழுக்களாக பிரிந்து இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

மக்கள் உணவு பொருட்கள் தொடர்பாக பல்வேறு முறைபாடுகளை முன்வைத்ததற்கமைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் இந்த சுகாதாரம் தொடர்பான சோதனைகள் இடம்பெறும்.; எனவே வர்த்தகர் வாடிக்கையாளர்களுக்கும் கொள்வனவாளர்களுக்கும். சிறந்த பாதுகாப்பான உணவுவகைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும.; எனவும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் தராதரமின்றி சகலருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
