ஹட்டன் நகரில் உணவகங்கள் திடீர் சோதனை.வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
ஹட்டன் நகரசபைக்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா நகர பிரதேசங்களில் காணப்படும் உணவகங்களில் சுகாதார முறைபடி உணவுகள் வழங்கப்படுதில்லை. என கிடைத்த முறைபாடுகளுக்கு அமைவாக இன்று (17) ஹட்டன் மற்றும் டிக்கோயா நகரங்களில் காணப்படும் உணவகங்கள் பேக்கரிகள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஹட்டன் டிக்கோயா நகர சபையின் சுகாதார பிரிவின் பொது சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
இதன் போது சுகாதார முறைகளுக்கு அமைவாக உணவுகள் மற்;றும் உணவுப்பொருட்கள் வைக்காத ஹோட்டல்கள் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டன.

இதன் போது பேக்கரி உற்பத்திகளும் சோதனை இடப்பட்டதுடன் பேக்கரி உணவுப்பொருட்கள் முறையாக வைக்கப்பட வேண்டும் என வலியுஞத்தப்பட்டதுடன் அவ்வாறு சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் இவர்கள் எச்சரித்தனர்.

இது குறித்த பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.எஸ் மெதவல அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ஹட்டன் நகரில் உள்ளள ஒருசில ஹோட்டல் அசுத்தமான நிலையில் உணவு தயாரிப்பதாகவும் சுகாதார முறைகளுக்கமைய உணவுகள் வழங்கப்படுவதில்லை. என்றும் ஹோட்டல்கள் அசுத்தமாக காணப்படுவதாகவும் பலர் முறைபாடுகளை செய்துள்ளனர்.அவ்வாறு ஹோட்டகல்கள் மற்றும் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்திலும் அறிவுறத்தல்களுக்கமைய செயப்படாவிட்டால் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர்கள் இதன் போது தெரிவித்தார்.

