கடல் மார்க்கமாக சட்டசவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை மஞ்சளுடன் இருவர் கைது.818 கிலோ மஞ்சள் மீட்பு
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட மஞ்சள் தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் கடற் குதியில் மேற்கொண்ட சுற்றிவளைபின் போதே குறித்த மஞ்சள் (16) மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது 12 பொதுகளில் கொண்டுவரப்பட்ட 510 கிலோ கிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதுடன் மஞ்சள் கொண்டுவருவதற்காக பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு ஒன்று கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இதே நேரம் மன்னார் வன்காலை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதலின் போது கைவிடப்பட்ட நிலையில் 05 சாக்குகளில் பொதி செய்யப்பட்ட 308 கிலோகிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் கொவிட் 19 சுகாதார வழிமுறைகளுக்கமைவாக தனிமைப்படுத்துவதற்காக சுகாதார துறையிரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட மஞ்சள் மற்றும் படகு ஆகிய தொற்று நீக்கம் செய்யப்பட்டு மேலதிக விசாணைக்காக யாழ்பாண சுங்க பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 30 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் மன்னார் பல்லெமுனை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் ஆரம்பகட்ட விசாரணையின் போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
