http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மீனாட்சி தோட்டத்தில் 40 லட்சம் ரூபா செலவில் குடிநீர் திட்டம் அங்குரார்ப்பணம்.

அரசாங்கத்தின் தூய குடிநீர் பெற்றுக்கொடுக்;கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வட்டவளை லொனெக் மீனாட்சி பிரிவில் சுமார் 40 லட்சம் ரூபா செலவில் நிர்;மானிக்கப்பட்ட குடிநீர் திட்டம் நேற்று (15) திகதி உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.


நீண்ட காலமாக மீனாட்சித் தோட்டத்தில் குடிநீர் பிரச்சினை நிலவி வந்தது. இதனை தீர்த்து வைக்குமாறு பொது மக்கள் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர.; எனினும் அது வெற்றியளிக்கவில்லை இந்நிலையில் இந்த குடிநீர்; பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு செங்கொடி சங்கம் கண்டி ரொட்டரி கழகத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த திட்டம் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன.
இந்த குடிநீர் திட்டம் அங்குரார்;ப்பணம் செய்து வைத்ததன் காரணமாக அந்த தோட்டத்தில் வாழும் பல நூறு குடும்பங்கள் நன்மையடைகின்றனர்.


இதன் போது இந்த குடிநீர்த்திட்டத்திற்காக முன்னின்று உழைத்த செங்கொடி சங்கத்தின் தோட்ட கமிட்டி தலைவர் விஜயகுமார் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
கண்டி ரொட்டரி கழக்கத்தின் ஆளுனரும் வர்த்தக சங்கத் தலைவருமான கே.விக்ணேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஆர்.சி விக்ணேஸ்வரன்,செங்கொடி சங்க பிரதிநிதிகள்,தோட்ட நிர்வாகம்,தலைவர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *