சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு பிள்ளையின் தந்தை மண்ணில் புதைந்து மரணம்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா பிரவுன்ஸீக் தோட்டத்தில் குழியில் புதைந்து நபரொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (13.09.2020) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போதே குறித்த குழியில் மண் சரிந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த சடலம் மரணவிசாரணை அதிகாரியின் மேற்பார்வையின் பின் தோன்றி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
உயிரிழந்த நபர் பிரவுன்ஸீக் தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியம் அமில சந்திரன் வயது 29 என அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

