கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட 142 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது.
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட கேரள கஞ்சா எனப்படும் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நேற்று (10) நேற்று முன்தினம் (09) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போதே இந்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.

வடக்கு கடற்படையினர்; வெற்றிலைக்கேணி கடற் பகுதியில் சந்தேகத்திக்கிடமான ஒரு படகினை அவதானித்துள்ளனர்.அதனை தொடர்ந்து அப்படகு வத்திராயன் பகுதிக்கு கரையொதுங்கும் போது குறித்த படகினை சோதனையிட்ட போது அதில் 43 கிலோ 270 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் நபர் ஒருவர் கை செய்யப்பட்டுள்ளார.; அதனை தொடர்;ந்து கேரள கஞ்சாவினை கொண்டு செல்வதற்காக வந்தாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நபர் ஒருவர் கடற் படையினரால் கடற்கரையில் நின்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது அவர் வருகை தந்த மோட்டார் சைக்கிலும் கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இதே நேரம் இலுப்பக்கடைவாய்,மற்றும்,கத்தலாம்பிட்டி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின் போது,போதைப்பொருள் வர்த்தகர்களால் மிகவும் சூக்சுமமான முறையில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 99 கிலோ 780 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது கொவிட் 19 சுகாதார வழிமுறைகளுக்கமைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் இருவர் மற்றும் ஒரு மோட்ட சைக்கில்,டிங்கி படகு ஆகியன மேலகதி விசாரணைகளுக்காக பளை மற்றும் இலுப்பைகடுவாய் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 32 மற்றும் 42 வயதுடையவர்கள் என்றும்,இவர்கள் வத்திராயன் பேசாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
