http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மலையகத்தில் கடும் மழை மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு.

மலையகத்தில் கடும் மழை மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலைநாட்டில் கணத்த மழை பெய்து வருகிறது.நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியதன் காரணமாக காசல்ரி,
கெனியோன், லக்ஸபான, நவலக்ஸபான, விமலசுரேந்திர, மவுசாகலை மற்றும் மேல்கொத்தலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிகவேகமாக உயர்ந்து வருகிறது.


எனவே எவ்வேளையிலும் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படலாம் என்பதனால் நீர்த்தேகத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்க மின்சாரசபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக நேற்று மாலை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளாகியுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழையால் நுவரெலியா ஹட்டன் மற்றும் ஹட்டன் கொழும்பு பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.இதனால் இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள்  மிகவும் அவதான வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.அத்தோடு அதிக மழை காரணமாக பல இடங்களில் மண்ரியும் அபாயமும் காணப்படுகின்றன ஆகவே மலைகளுக்கும் மண்திட்டுக்களுக்கும் சமீபமாக வாழும் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மரக்கறி உற்பத்தியாளர்களும் தேயிலை மற்றும் இறப்பர் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் மரக்கறி மற்றும் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *