ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொழும்பு,இரத்தினபுரி,காலி,களுத்தரை,கேகாலை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் காற்றின் வேகம் 60 தொடக்கம் 70 வரை கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்து.
இதற்கமைவாக நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசியதன் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. பல வீடுகளின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு சென்றுள்ளன.
புகையிரத வீதிகளில் பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதனால் களவெளி பகையிரத சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மரம் முறிவு மற்றும் காற்று காரணமாக பல இடங்களில் அடிக்கடி மின் துண்டிப்பும் ஏற்பட்டுள்ளன.
