பொலன்நறுவையில் சிறைக்கைதி ஒருவர் சுறுக்கிட்டு தற்கொலை.
பொலன்நறுவை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதியொருவர் அச்சிறைச்சாலையில் உள்ள கழிவறையில் சுறுக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் போதைப்பொருள் குற்றத்திற்காக நீதிமன்றத்தினால் சிறை வைக்கப்பட்ட 28 வயதுடைவர் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்நறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
