சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 815 கிலோ மஞ்சளுடன் மூவர் கைது.
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட 815 கிலோகிராம் மஞசளுடன் மூன்று பேர் கடற் படையினாரால் கற்பிட்டி கடல் பகுதியில் வைத்து இன்று (06) திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடல் பகுதியில் சுமார் 30 சாக்குகளில் பொதி செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட காய்ந்த மஞசள் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது மீட்கப்பட்டுள்ளன.
இதன் போது மஞ்சள் ஏற்றிச்செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட சிறியரக லொறி ஒன்று கடற் படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும். 24 தொடக்கம் 31 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் கொவிட் 19 சுகாதார வழிமுறைகளுக்கமைவாக மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் மஞ்சள் மற்றும் லொறி,சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

