அப்புகஸ்தென்ன தோட்ட பகுதியில் சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்டு.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா அப்புகஸ்தென்ன மேல் பிரிவு தோட்டத்தில் சிறுத்தைக்குட்டியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (05 ) திகதி காலை இடம்பெற்றுள்ளது. தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்கள் சிறுத்தை குட்டியினை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்ததுள்ளனர்.
பொலிஸார் வனபாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்தனையடுத்து நல்லதண்ணீர் வன இலாக்க அதிகாரிகள் வருகை தந்து குறித்த சிறுத்தைக் குட்டியினை மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.
இச்சிறுத்தைக் குட்டி சுமார் மூன்று நான்கு மாதங்கள் நிறம்பியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக தேயிலை தோட்டங்கள் காடுகளாக மாறிவருவதனாலும் இலகுவாக கொடிய வனவிலங்குகளுக்கு உணவு கிடைப்பதனாலும்.சிறுத்தைகள் தமது வாழ்விடங்களை மாற்றிக்கொண்டுள்ளன.
மக்கள் நடமாடும் இடங்களில் சிறுத்ததைகள் நடமாடுவதனால் பொது மக்களின் உயிர்களுக்கும் சிறுத்தை இனத்தின் உயிருக்கும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
