http://ceylononline.lk/

Ceylon Online News Portal

எண்ணெய் கசிவினால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்க 25 – 30 வருடங்கள் ஆகலாம்; கடற்பாதுகாப்பு அதிகாரசபை

அம்பாறை சங்கமன்கண்டி இறங்குதுறையில் இருந்து 38 கடல்மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் இந்தியா நோக்கிச்சென்ற எம்.டி.நியூ டயமன் என்ற கப்பலில் நேற்று தீப்பரவல் ஏற்பட்டது.

இந்த கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எண்ணெய் கசிந்து நாட்டின் கிழக்குக் கரையோரப்பகுதிகளில் படியுமானால் அவற்றில் 60 சதவீதமானவற்றை மாத்திரமே அகற்றக்கூடியதாக இருக்கும். அதுமாத்திரமன்றி எண்ணெய் கசிவினால் அப்பகுதிகளில் ஏற்படத்தக்க நச்சுத்தன்மை, மாசடைவு என்பன முற்றாக நீங்கி அவை பழைய நிலைக்குத் திரும்புவதற்கு 25 – 30 வருடங்கள் ஆகலாம். சிலவேளைகளில் அது பழைய நிலைக்குத் திரும்பாமலே போகக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளன என்று கடற்பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியிருக்கிறது.

இது குறித்து கடற்பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர மேலும் கூறியிருப்பதாவது:

இந்தக் கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும்எண்ணெய் வெளியில் கசிய ஆரம்பிக்குமானால், பாதிப்பு மிகவும் உயர்வானதாக இருக்கலாம். அது கட்டுப்படுத்தக்கூடிய நிலையைத் தாண்டிய பாரியதொரு சூழல் மாசடைவை ஏற்படுத்துவதாகவே அமையும்.

இலங்கை மாத்திரமன்றி முழு உலகமுமே எதிர்கொள்ள நேரிடும் மிகமோசமான சுற்றாடல் மாசடைவாக இருக்கும் என்றே நாம் கருதவேண்டும். அதனைத் தடுப்பதற்கோ அல்லது எதிர்கொள்ளத் தயாராகுவதற்கோ எமக்குப் போதியளவு காலஅவகாசம் இல்லை.

இந்த எண்ணெய் கடலில் கலக்கும்போது அது கிறீஸை போன்று மாற்றமடையும். அந்த கிறீஸ் அருகம்பை, நிலாவெளி, காயாங்கேணி, வாகரை, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குப் பரவலடையுமாக இருந்தால் அந்தப் பகுதிகளில் உயர்வாக இருக்கும் சுற்றுலாத்துறை வெகுவாகப் பாதிப்படையும். அருகம்பை என்பது உலகலாவிய ரீதியில் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு சுற்றுலாத்தளம் ஆகும்.  அங்கு ஏற்படத்தக்க நச்சுத்தன்மை, மாசடைவு என்பன முற்றாக நீங்கி பழைய நிலைக்குத் திரும்புவதற்கு 25 – 30 வருடங்கள் ஆகலாம். சிலவேளைகளில் அது பழைய நிலைக்குத் திரும்பாமலே போகக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

WWOS_200904E

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *