http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நாட்டில் நேற்றைய தினம் 10 புதிய கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

நாட்டில் நேற்றைய தினம் புதிதாக  10 புதிய கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில்,

இந்தியாவில் இருந்து வருகை தந்த ஐவர் (5 பேர்)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த இருவர் (2 பேர்)

குவைத்தில் இருந்து வருகை தந்த இருவர் (2 பேர்)

மற்றும்  கட்டாரிலிருந்து வந்த ஒருவர் (ஒருவர்)

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3101 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 4 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் பூரணமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2883 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 206 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *