http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கண்டி, பல்லேகல பகுதியில் மீண்டும் நில நடுக்கம்

இன்று கண்டி, பல்லேகல பகுதியில் காலை 07.06 மணிக்கு பூமி நடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. மகாகநாதரவா நில அதிர்வு நிலையத்தில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

இது உண்மையில் இயற்கையான நில நடுக்கமா அல்லது வேறு காரணத்தினால் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதா என்பது இன்னும் கண்டறியப்படாத நிலையில், நிலநடுக்கத்திற்கான காரணத்தை கண்டறிய புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

முன்னதாக, கண்டியின் சில பகுதிகளிலும், முக்கியமாக ஹரகாமா மற்றும் திஹானவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறிய நில அதிர்வு பதிவுசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *