சானிடைசரை பயன்படுத்துவதால் கடுமையான பக்கவிளைவுகள்
உலகம் முழுவதும் கொரோனா நோய் பாதிப்பிற்கு பிறகு சனிடைசர் பயன்பாடுகள் அதிகமாக உள்ள இந்த நிலையில், இதை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளை கண்டறிய இந்திய நுகர்வோர் வழிகாட்டுதல் சங்கம் இந்தியா முழுவதும் சுமார் 120க்கும் மேற்பட்ட சானிடைசர் மாதிரிகள், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதில் பல சானிடைசர்களில் மெத்தனால் இருந்துள்ளது கண்டுபிடிக்கபட்டுள்ளது.நச்சுத்தன்மை மிக்க மெத்தனால் கலந்த சானிடைசரை பயன்படுத்துவதால் பார்வையிழப்பு போன்ற கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படுமென இச்சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோயைத் தடுப்பதற்கு சாதாரண சோப்பை 20 வினாடிகளுக்கு தண்ணீரில் கைகளை கழுவினாலே போதும். தண்ணீர் கிடைக்காத சந்தர்ப்பங்களில் குறைந்தது 60% ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது
