http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் 80 புதிய கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

செவ்வாய்க்கிழமை கட்டாரிலிருந்து வருகை தந்த 43 பேர் மற்றும் திங்கட்கிழமை வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து தொற்றுக்குள்ளாகிய 37 பேர் என நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் 80 புதிய கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய நேற்று மாலை வரை நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3092 ஆக அதிகரித்துள்ளதோடு , அவர்களில் 2879 பேர் குணமடைந்துள்ளனர்.

180 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 54 பேர் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *