நாட்டில் மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய 12 பேருக்கும், மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய மூவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து 3,010 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 138 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 09 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 52 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
