http://ceylononline.lk/

Ceylon Online News Portal

சாரதியாக மாறிய ஒரு மருத்துவரின் மனிதநேயம்!

இந்தியா, புனே பகுதியில் உள்ள அரசு கொரோனா சிகிச்சை மையத்தில் கடந்த வாரம் 71 வயது நோயாளி தன் முழு குடும்பத்துடனும் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திடீரென்று நோயாளிக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து உடல் நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து உயர் தர சிகிச்சை அளிக்க அவரை உயர் மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதேவேளை அந்த மருத்துவமனையில் அச்சமயம் சேவையில் இருந்த ஆம்புலன்ஸ் சாரதி  திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவே, பணியில் இருந்த ரஞ்சித் நிகம்(வயது35) என்ற மருத்துவர் எவ்வளவு முயற்சி செய்தும் மற்றொரு ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தினால் சற்றும் தாமதிக்காமல் மற்றொரு மருத்துவரின் உதவியுடன் ஆம்புலன்சை ஓடிச்சென்று அந்த நோயாளியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட கொரோனா நோயாளியின் மகன் மருத்துவர் ரஞ்சித் நிகம், ராஜ் புரோகித் ஆகியோர் ஆம்புலன்சை மட்டும் ஓட்டி செல்லவில்லை. அவர்கள் எனது தந்தைக்கு மருத்துவமனையில்படுக்கை கிடைக்கவும் கடும் முயற்சி செய்தனர். கடைசியில் அவர்கள் எனது தந்தையை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றிவிட்டனர்” என உருக்கமாக கூறினார்.

மருத்துவர்கள் உண்மையான கொரோனா போராட்ட வீரர்கள் என அவரின் மனித நேய சேவையை வெகுவாக மற்றவர்கள் பாராட்டி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *