http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஹட்டன் ஹிஜ்ராபுரா வீடு ஒன்றில் திடீர் தீ ஒரு அறை உட்பட பொருட்கள் முற்றாக சேதம்.(வீடியோ இணைப்பு)

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ஹிஜ்ராபுர வீடு ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பம்வம் இன்று 2.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்துக்களோ காயங்களோ ஏற்படாத போதிலும் இவ்வீட்டின் ஒர் அறையும் அவ்வறையிலிருந்து பொருட்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த வீட்டில் வாடகைக்கு விடப்பட்ட பகுதி மூடியிருந்த நிலையில் அந்த வீட்டிலிருந்து புகை வருவதனை கண்ட அயலவர்கள் சத்தமிட்டுள்ளனர்.


அதனை தொடர்ந்து குறித்த வீட்டின் கதவினை உடைத்து பார்த்த போது ஒரே புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.
அதனை தொடர்ந்து பிரிதேசவாசிகள் இணைந்து குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துள்ளனர்.


இந்த தீவிபத்து குறித்த ஹட்டன் நகரசபையின் தீயணைப்பு பிரிவுக்கும் பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் குறிப்பிட்ட நேரம் வரை வருகை தரவிலலை என பொது மக்கள் கவலை வெளியி;ட்டனர்.


தீ விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்படாத போதிலும் மின் ஒழுக்கு காரணமாக தீ ஏற்;பட்டிருக்கலாம் என பொது மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
குறித்த தீ பரவுதற்கான காரணம் தொடர்பாகவும் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாகவும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *