இலங்கையில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
இலங்கையில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவில் இருந்து வருகைதந்த இருவர் (2)
கென்யாவில் இருந்து வருகைதந்த ஒருவர் (1)
கந்த காடு புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த 10 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,984 ஆக அதிகரித்துள்ளது.

