ஜீப் வண்டி குடை சாய்ந்து விபத்து இரண்டு பேர் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதி..
ஹட்டன் கே.சுந்தரலிங்கம் .
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஜீப் வண்டி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் இரண்டு பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (23) திகதி கினிகத்தேனை பிட்டவல பகுதியில் பிரதான வீதியில் நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கித்துல்கலை பகுதியிலிருந்து அக்கரபத்தனையில் உள்ள உறவினரான வைத்தியர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே ஜீப் வண்டி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்து சாரதிக்கு வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


