சிறைச்சாலையில் புதைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் புதைக்கப்பட்டிருந்த 19 கையடக்கத் தொலைபேசிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளன என சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசிகள், பொலித்தீன் பையில் பாதுகாப்பாக சுற்றப்பட்டு குழிக்குள் புதைக்கப்பட்டிருந்தாகவும், இவற்றில் 03 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளும் உள்ளடங்குவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

