தாயினால் சிறைவாசம் அனுபவிக்கும் 46 பிள்ளைகளை விடுவிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நடவடிக்கை.
தாயினால் சிறைவாசம் அனுபவித்து வரும் 46 பிள்ளைகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ராஜங்க அமைச்சர் சுதர்ஷின பர்னான்டோ பிள்ளை அவர்களுக்கு ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.
குறித்த தாய் மார்கள் கருவுற்றிருக்கும் போதும், கைகுழந்தைகள் இருக்கும் போதும். போதை பொருள் வர்த்தகம் மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் காரணமாக நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 46 பிள்ளைகள் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இவ்வாறு சிறைவாசம் அனுபவிக்கும் ஐந்து வயத்திற்கு குறைந்த பிள்ளைகளை தாய்மாரின் கண்காணிப்பில் வைப்பதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வாறு சிறைசாலையில் உள்ள பிள்ளைகளை விடுவிப்பதற்கு உள்ள சட்டநடவடிக்கைகள் என்ன என்பதனை ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் பணித்துள்ளதாக அதற்கமைய தற்போது நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் ராஜங்க அமைச்சர் சுதர்ஷினி பர்ணான்டோ பிள்ளை தெரிவித்துள்ளார்.
