அங்கொட லொக்காவின் மற்றுமொரு உதவியாளர் பொலிஸ் துப்பாக்கிச் மூ10ட்டில் பலி.
திட்டமிடப்பட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழுவின் உறுப்பினரான அங்கொட லொக்கா என்பவரின் மற்றுமொரு உதவியாளரான சமியா என அழைக்கப்படும். சமிந்த சந்தமால் எதிரிசூரிய என்ற நபர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் கம்பகஹ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்தேக நபர் பொலிஸாருக்கு துப்பாக்கி பிரயோகம் செய்து தப்பிச்செல்ல முற்பட்ட போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
