http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஆஸ்திரேலியா மக்கள்  அனைவருக்கும்  இலவச கொரோனா  தடுப்பூசி! ஆஸ்திரேலிய  பிரதமர்  அறிவிப்பு

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்துள்ள அஸ்ட்ராஜெனக்கா நிறுவனத்துடன் ஆஸ்திரேலிய அரசு 18 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறும்போது, 

“ ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, உலகின் மிக முன்னேறிய மற்றும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசி ஆகும். இதற்காக நாம் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற சோதனை வெற்றி அடைந்தால் 2½ கோடி ஆஸ்திரேலிய மக்களுக்கு அந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும்” என குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசிக்காக ஆஸ்திரேலியா போட்டுள்ள முதல் ஒப்பந்தம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *