வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்ட சடலம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
டுபாய் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பட்டதனை தொடர்ந்து மீண்டும் குறித்த சடலம் கட்டு நாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக பாதுகாப்பு பிரிவனர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவுது யாழ்பாணத்தினை பிறப்பிடமாக கொண்ட 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் டுபாய் நாட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறித்த நபரின் சடலம் நேற்றைய தினம் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தாமல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்ததனையடுத்து சடலம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்த போதிலும்.அவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது
