கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இடம்பெற்ற பெயர்கள் புதிய நியமனக் கடிதங்களில் நீக்கம்: பட்டதாரிகள் எதிர்ப்பு
கடந்த மார்ச் மாதம் வௌியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பெயர்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வௌியிட்டனர்.
இது தொடர்பில் சில பட்டதாரிகளின் சங்கங்கள் இன்று கொழும்பில் எதிர்ப்பை வௌிப்படுத்தியதுடன், அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தினர்.
குறித்த குழுவினர் ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாகச் சென்றனர்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்புரிமையைக் கருத்தில் கொண்டு இதற்கு முன் தனியார் துறையில் கடமையாற்றியவர்கள் புதிய பெயர்ப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு குழுவினருக்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகளை சந்தித்து பிரச்சினையை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வௌியேறினர்.
