நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் விசாரணைக் குழு
நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டமை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு விசாரணைக் குழு குழுவொன்றை நியமித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இக்குழு ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என இந்த குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவம் மீள நிகழாமையை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில்,
மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறுக்கான காரணம் இதுவரை கண்டறியபடவில்லை என்றும் லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளில் எவ்வித கோளாறுகளும் ஏற்படவில்லை என்றும் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டனர் என இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஏனைய மின்னுற்பத்தி நிலையங்களின் மின்பிறப்பாக்கிகள் அனைத்தும் தற்போது சோதனைக்குட்படுத்தி சீர்செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
