மைத்திரியின் பதவியை பற்றி முரண்பட்ட தகவல்கள்
எல்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தற்போதைய அரசாங்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பதவி நிச்சயம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினையும் ஒரே கட்சியாக இணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அமைச்சரவையில் இடம்கொடுக்கப்படாமை தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அவரிற்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்றும் வரும் நிலையிலேயே அவருக்கான அமைச்சுப் பதவிகள் எவையும் வழங்கப்படவில்லை என்று தென்னிலங்கை ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டுயிருந்தன.
