அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள ஊழியர் ஹெரோயினுடன் கைது
நேற்று (16) மாலை அத்துருகிரிய பகுதியில் வைத்து 5.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் சோதனையிட்டபோது அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் ஆய்வக ஊழியர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 18 கிராம் 730 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
