http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மைத்ரியின் பேஸ்புக் பதிவு சமூக வலைத் தளத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. புதிய பதவி ஒன்றும் இல்லை; இறுதியில் ஏமாற்றமே!

கடந்த வியாழக்கிழமை, மைத்ரிபால சிறிசேன தன்னைப் பற்றிய ஒரு படத்தை வெளியிட்டு, “ஒரு சோர்வான சவாலை வென்ற பிறகு, அதன் மிக உயர்ந்த வெகுமதியைப் பெறுவதற்கு ஒருவர் சிறிது நேரம் பொறுமையாக காத்திருக்க வேண்டும்” என்ற கருத்தை வெளியிட்டார்.

அவர் பதிவை அடுத்து பலர் தங்கள் படங்களுடன் பதிவிட்டு சமூகவலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்காக அரசியல் அமைப்பு திருத்தத்தின் ஊடாக துணை பிரதமர் பதவியை உருவாக்கி வழங்குவதற்கு அரச உயர் மட்டத்தில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகார விசாரணையில் மைத்திரியின் பெயர் இருப்பதுடன். அவருக்கெதிராக பாரதூர குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் துணைப்பிரதமர் என்கிற பதவியை வழங்குவதை அரச உயர்பீடம் தவிர்க்க முடிவெடுத்திருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *