http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மைத்திரிக்காக புதிதாக உருவாக்கப்பட்ட பிரதிப் பிரதமர் பதவி?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதி பிரதமர் பதவியை வழங்க தயாராக இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று கண்டியில் வைத்து பதவியேற்று கொண்டதுடன் மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்த அமைச்சு பதவியும் வழங்கப்படவில்லை.

எனினும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அரசியலமைப்புத் திருத்தத்தின் போது பிரதி பிரதமர் பதவியை உருவாக்கி, அதனை மைத்திரிக்கு வழங்க உள்ளதாக நம்பிக்கையான அரச தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

 

மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி என்பதால், அவருக்கு அமைச்சு பதவியை விட உயர்வான பதவியை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *