http://ceylononline.lk/

Ceylon Online News Portal

15 அதிகாரிகள் பணி நீக்கம்; 19 அதிகாரிகள் இடமாற்றம்; அதிரடி நடவடிக்கை

பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த 15 சிறை அதிகாரிகளும் மஹர, மெகசின், பூஸ்ஸ, கொழும்பு, வெலிகடா, காலி, நீர்கொழும்பு, வாரியபொல மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பூஸ்ஸ சிறைச்சாலையை சேர்ந்த 10 அதிகாரிகளும் நீர்கொழும்பு சிறைச்சாலையை சேர்ந்த 9 அதிகாரிகளும் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *