http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஓட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி விட்டார் சஜித் பிரேமதாச- நசீர் அஹமட் குற்றச்சாட்டு

சஜித் பிரேமதாச தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, தமது கட்சிக்கு மட்டுமன்றி முஸ்லிம் சமூகத்திற்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக நசீர் அஹமட்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தொகுதி விட்டுக்கொடுப்பு, ஒத்துழைப்பு மற்றும் மாவட்டப் பலம் என்பவற்றைக் கருதியே சில தியாகங்களையும் தமது கட்சி செய்ததாக நசீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் தலைவர் ஹக்கீம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் வாசற்படிக்கு போவதும் வருவதுமாக அலைக்கழிக்கப்படுவது கவலைக்குரியது என நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஏமாற்றங்கள் ஏற்படுமென தெரிந்திருந்தால், கட்சியின் தனித்துவ சின்னத்தில் போட்டியிட்டிருப்போம், முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பயன்படுத்தி, தன்னைப் பலப்படுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பலவீனப்படுத்தியுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *