67 ஆயிரம் வாக்குகளை பெற்ற எமக்கு தேசிய பட்டியல் ஆசனம் சாபகேடு: அத்துரலியே ரத்ன தேரர்
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்,
பாரிய சவால்களுக்கு மத்தியில் பொதுத்தேர்தலில் 67 ஆயிரம் வாக்குகளை பெற்றோம். எமக்கு தேசிய பட்டியலில் 1 ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே தற்போது அனைவருக்கும் சாபக்கேடாக மாறியுள்ளது அமைக்கப்பட்ட கூட்டணியின் பிரகாரம் தேசிய பட்டியல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அபே ஜனபல வேகய கட்சிக்கு கிடையாது.
தேசிய பட்டியல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் எமக்கு மாத்திரமே உண்டு.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பது சவால்மிக்கது நாட்டில் அனைத்து இன மக்களும் பொது சட்டத்திற்கு அடிபணிய வேண்டும் என்பதற்காக இந்த தேசிய பட்டியல் ஆசனத்தை பயன்படுத்துவோம். வெகுவிரைவில் சிறந்த தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
