ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா தொற்று
இந்தியா,உத்தர பிரதேசம் மாநிலம்,அயோத்தியில் கடந்த ஆக.,05ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய ராமர் கோயில் பூமி பூஜையில் பங்குபெற்ற ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி, உத்தர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மகான்த் நிரித்ய கோபால் தாஸ் என 5 பேர் மட்டுமே மேடையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அறக்கட்டளையின் தலைவர் மகான்த் நிரித்ய கோபால் தாஸ்க்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவருக்கும்க்கும் அதிர்ச்சி அளிக்கிறது.

