9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு; தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை
கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 15 ஆம் திகதி இரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம், கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
