மரண தண்டனை குற்றவாளியான பிரேமலால் ஜயசேகர மனு தாக்கல்
2015 ஜனாதிபதித் தேர்தலுக்காக கஹவத்தை பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றுக்கு இடையூறு விளைவித் ஒருவரை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல்நீதிமன்றம் கடந்த மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்ததுடன் குற்றவாளியான பிரேமலால் ஜயசேகர, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், அவர் பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்க வேண்டும் எனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.
