பயங்கரவாத தடுப்புபிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் இடையே ஏற்பட்ட போட்டி மனப்பான்மையே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் முறியடிக்க முடியாமல் போனது
பயங்கரவாத தடுப்புபிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் இடையே ஏற்பட்ட போட்டி மனப்பான்மையே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் முறியடிக்க முடியாமல் போனது என
தீவிரவாத விசாரணை பிரிவின் பதில் நிலையப் பொறுப்பதிகாரி கயான் ரத்னாயக்க உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணை குழுவிடம் தெரிவித்துள்ளார்.
2019 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று தன்னுடைய அதிகாரிகள் சூழ சஹ்ரானின் வீட்டில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குற்றப்புலனாய்வுத்துறையின் அதிகாரியான டயஸ், இந்த விசாரணையை பயங்கரவாத தடுப்பு பிரிவு தொடர்ந்து நடத்தினால் அது குற்றப்புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு விசாரணையிலிருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவை விலகச் சொன்னார்.
முரண்பட்ட வகையில் விசாரணையில் பதிலளித்த சஹ்ரானின் மாமி மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோரிடம் அதற்குமேல் தம்மால் விசாரணையை தொடர முடியவில்லை என்றும், பிற்காலகாலத்தில் குற்றப்புலனாய்வுத்துறையினரின் தொகுப்பு விசாரணை அறிக்கையில் சஹ்ரானின் மாமியின் சகோதரர் தனிப்பட்ட தகவல் தருபவர் என்ற விடயம் தெரிவிக்கப்படவில்லை என கயான் ரத்னாயக்க உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணை குழுவிடம் தெரிவித்துள்ளார்.
