ராஜாங்க அமைச்சர் ஜீவனுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்ஸூக்கும் கொட்டகலையில் அமோக வரவேற்பு.
ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு 29 ராஜாங்க அமைச்சர்களும் 25 கெபினட் அமைச்சர்களும் நேற்று (12) திகதி கண்டி தலதா மாளிகையில் உள்ள மகுல்மடுவ என்ற மண்டபத்தில் பதவி பிரமானம் செய்து கொண்டனர். இதில் தோட்ட உட்கட்டமைப்பு சமூக மேம்பாட்டு ராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் முன்னாள் கல்வி அமைச்சரும் நிதிச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸவரனுக்கும். கொட்டகலை நகருக்கு ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள்; மற்றும் பொது மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டன.

இதன் போது நகரங்களில் கூடிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி பொன்னாடை அணிவித்து அவரை வரவேற்றனர்.
இந்த நிகழ்வுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தன.

இதன் போது பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரனுக்கும் பொன்னாடை அணிவித்து கைலாக்கு செய்து பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தின.
இந் நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

