உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.50 இலட்சத்தைக் தாண்டியுள்ளது
கொரோனாவால் உலகம் பெரும் மனிதப் பேரழிவுகளை சந்தித்து வருகிறது. உலகம் முழுவதும் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நோய் பரவியுள்ளது.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.50 இலட்சத்தைக் தாண்டியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 2.07 கோடியைக் தாண்டியுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1.36 கோடி மேலும்
சிகிச்சை பெற்று கொண்டிருப்பவர்களில் மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்கள் 64 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர்.

