பருத்தித்துறை கடற்பரப்பிலிருந்து 275 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு.
பருத்தித்துறை கடற் பரப்பிலிருந்து 275 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை இரானுவத்தினர் தெரிவித்தனர்.
கடற்பரப்பில் சட்டவிரோத கடத்தல்கள் மனித வர்த்தகம் போன்றனவற்றை கட்டுப்படுத்துதற்காக கடற்பரப்பில் தொடர்ச்சியாக ரோந்து நடவடிக்கையில் கட்படையினர். ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் போதே இந்த கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கடற் பரப்பில் மர்ம பொருள் மிதந்து வருவதை கண்டு அதனை சோதனை செய்த போதே இந்த கஞ்சா மீட்கப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து பருத்தித்துறை காவல்துறையிடம் அதனை ஒப்படைக்கப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கேரள கஞ்சா போதை பொருள் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

