ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21 ஆம் திகதி முன்னர் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அறிவித்தல்!
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ளவதற்காக, எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னும், முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவிற்கு எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

