எட்டாவது பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுததிய 30 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லை.
எட்டவது பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய 30 புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தனது ஓய்வூதியத்தினை இழந்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியத்தினை பெறுவதற்கு பாராளுமன்றத்தில் ஐந்து வருடம் தனது சேவையினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். எனினும் எட்டாவது பாராளுமன்றம் நான்கு வருடமும் எட்டு மாதங்களில் கலைக்கப்பட்டதனாலும் குறித்த உறுப்பினர்கள், இம்முறை மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாமையும் காரணமாக இவ்வாறு தனது ஓய்வூதியத்தினை இழந்துள்ளனர்.
இதில் ஐக்கிய தேசிய கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி சென்ற 22 உறுப்பினர்களும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் 04 உறுப்பினர்களும்,ஐக்கிய மக்கள்; சுதந்திர முன்னணியின் 03 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியில் ஒரு உறுப்பினரும் அடங்குகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதச் சம்பளமாக 54285 ரூபா கொடுப்பனவுகள் இன்றி வழங்கப்படுகின்றன.இதில் ஓய்வூதியமாக முன்றில் ஒரு பகுதி பெற்றுக்கொடுக்கப்படும்.அதாவது 18095 ரூபா மாதாந்தம் ஓய்வூதியமாக பெற்றுக்கொடுக்கப்படும்.
உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் 15 வருடங்கள் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தால் அவருக்கு முன்றில் இரண்டு தொகை 36190 ரூபா சம்பளம் ஓய்வூதியமாக பெற்றுக்கொடுக்கப்படும்; என்பது குறிப்பிடத்தக்கது.
