இலங்கையில் முதன் முறையாக அமைச்சரவையொன்று தலதா மாளிகையில் பதவிபிரமானம்
இலங்கையில் முதன் முறையாக அரசாங்கத்தின்புதிய அமைச்சரவையொன்று கண்டி தலதா மாளிகையில் பதவிபிரமானம் செய்துக் கொள்ளவுள்ளது.
இலங்கையில் தலதா மாளிகையில் அமைச்சரவை பதவியேற்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென அஸ்கிரிய பீடம் தெரிவித்தது
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த நிகழ்வை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
28 அமைச்சர்களும் 40 இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொள்ளவுள்ளனர்.
அமைச்சரவையின் எண்ணிக்கை , அமைச்சு உள்ளடங்கும் நிறுவனம் மற்றும் தொடர்பான சட்டம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
பதவிப்பிரமான நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

