கொரோனா தடுப்பூசி மருந்தின் விலை நிர்ணயம்
உலகிலேயே அதிக அளவிலான தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனமான ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்டு’ என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை,’ஆஸ்ட்ரா ஜெனகா’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது.
இந்த மருந்து மனிதர்களுக்கான பரிசோதனையில் இரண்டாம் கட்டத்தில் இருந்தாலும் இது இப்பொழுது வருவாய் குறைந்த நாடுகளான இந்தியா மற்றும் இதர நாடுகளை கருத்தில் கொண்டு பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தம் மூலம் ரூபாய் 225 என்ற விலையில் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு 10 கோடிக்கும் மேல் அதிகமான மருந்துகளை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் , 92 நாடுகளுக்கு விற்பனை செய்வதற்காக தங்கள் நிறுவன தொழிற்சாலையில் ஒரு நிமிடத்திற்கு 500 டேஸ் தயாரிக்கும் வசதி உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதற்காக 3375 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது 
