http://ceylononline.lk/

Ceylon Online News Portal

தேசிய பட்டியல் பெயர் விபரங்களை  14 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு  அறிவிப்பு

 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளும் தனது தேசிய வேட்பாளர் பட்டியல் பெயர்களை ஆகஸ்ட் 14ம்  திகதிக்கு முன்  கையளிக்க வேண்டும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 கடந்தமுறை போலல்லாமல் இம்முறை பொதுத்தேர்தல் தேசிய பட்டியல் பெயர்களை வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுப்பதாக  தேர்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று பிற்பகல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வின் தேசியப் பட்டியல் பெயர் விபரங்களில் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *