http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மலையகத்தில் கடும் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறப்பு.(வீடியோ இணைப்பு)


மலையகத்தில் கடும் மழை மேல் கொத்மலை நீர்த்தேக்த்தில் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன இதனால் கொத்மலை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.எனவே; நீர்த்தேகத்திற்கு கீழ் தாழ் நிலப்பபகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடம் முகாமைத்துவ மத்திய நிலைய பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நீர் போச பிரதேசங்களுக்கு அதிக மழை வீழ்ச்சி கிடைத்து வருவதனால் டெவோன்,சென் கிளயார் ஆகிய நீர் வீழ்ச்சிகளின் நீர் மட்டமும் உயர்வடைந்துள்ளன.
மலையகத்தில் கடந்த சில தினங்களாக கடும் காற்றுடன் கணத்த மழை பெய்து வருகிறது.இந்த அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.
நீரேந்தும் பிரதேசங்களுக்கு அதிகப் படியான மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறுவதனால் நீர்த்தேக்களின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது இதனால் காசல் ரி லக்ஸசபான. நவலக்ஸபானஇ கெனியோன் மவுசாகலை பொல்பிட்டிய உள்ளிட்ட நீர்த்தேக்களின் நீர் மட்டம் மிக விரைவாக உயர்ந்து வருகிறது இதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு மின்சார சபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதே வேளை தற்போது ஆடிக்காற்று பலமாக வீசுவதனால் பல இடங்களில் மரம் முறிந்து வீழ்ந்து அடிக்கடி மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன..ஹட்டன் பகுதியில் பலத்த மழை காரணமாக அடிக்கடி மின் துண்டிப்பு இடம்பெறுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகளில் கடும் காற்று காரணமாக கூரைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.ஹட்டன் கொழும்பு,ஹட்டன் நுவரெலியா,தலவாக்கலை பூண்டுலோயா,கம்பளை நுவரெலியா ஆகிய பிரதான வீதிகளில் பல இடங்களில் மண் திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. தொடர்;நதும் மழை பெய்து வருவதனால்; மண் திட்டுக்கு அருகாமையிலும் மலைகளுக்கு அருகாமையிலும் கடும் காற்று வீசும் போது மரங்களுக்கு அருகாமையில் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதுஇ
இதே நேரம் மழையுடன் ஹட்டன் கொழும்பு வீதியில் கலுகலஇபிட்டவலஇகினிகத்தேனைஇகடவலஇதியகலஇவட்டவளைஇகுயில் வத்தை உள்ளிட்ட பகுதியிலும் ஹட்டன் நுவரெலியா வீதியில் குடாகம கொட்டகலை சென்கிளயார் தலவாக்கலை ரதல்ல நானுஓயா உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் பனி மூட்டமும் காணப்படுவதனால் வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாகத் தனது வாகனங்களைச் செலுத்துமாறும் பனி மூட்டம் காணப்படும் இடங்களில் தங்களது வாகனத்தில் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு தமக்குரிய பக்கத்தில் வாகனங்களைச் செலுத்துவதன் மூலம் விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளலாம் எனப் போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன் கடும் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக நால் நடை வளர்ப்பாளர்கள். தங்களது கால் நடைகளுக்குப் புற்களை அறுக்க முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.குளிர் மற்றும் மழை காரணமாகத் தோட்டங்களில் தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர்.
கடும் குளிர் மற்றும் காற்று காரணமாக பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு வருவதற்குத் தயங்குவதாகவும் இதனால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தோட்ட நிர்வாகங்கள் மேலும் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக மலையக நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.இதனால் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கடந்த சில தினங்களாக நகரங்களுக்கு மக்கள் வருகை குறைந்துள்ளமையினால் மரக்கறி உற்பத்தியாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *