கைது செய்வதை தடுக்க ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு
தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரீன் புல்லே, முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மனுவிற்கு கடுமையாக ஆட்சேபனை தெரிவித்ததால் நீண்ட பரிசீலனையின் பின்னர் குறித்த மனு விசாரணைக்கு அனுமதி வழங்கும் அளவிற்கு போதுமான சட்ட ஏற்பாடுகள் வௌிப்படாததால் அதனை நிராகரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது
